மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த காய்கறி வியாபார கடைகளில் சில்லரை விற்பனைக்கு தடை + "||" + Echoing the increase in corona spread: Retail ban on wholesale vegetable shops in Chengalpattu district

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த காய்கறி வியாபார கடைகளில் சில்லரை விற்பனைக்கு தடை

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த காய்கறி வியாபார கடைகளில் சில்லரை விற்பனைக்கு தடை
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று தடுப்பு நடைமுறைகள் சரியாக பின்பற்றாத காரணத்தால் வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவித்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய்த்தொற்று உள்ளவர்களை வீட்டுக்காவலில் வைத்து 14 நாட்கள் கண்காணிப்பதாகவும், மாவட்டத்தில் முதலில் 70 சோதனை முகாம்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 100 முகாம்களாக கூடுதலாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி உள்ளதாக தெரிவித்த அவர், ஒருநாளைக்கு சராசரியாக 1,000 பேர் வரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாகவும், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்தும் வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், இதுவரையில் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் முதல்நிலை தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தாம்பரம், செங்கல்பட்டு நகராட்சிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் ‘கொரோனாவுக்கு சுயவைத்தியம் செய்துகொள்வது தவறான செயல்’; அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் கொரோனாவுக்கு சுயவைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்வது தவறான செயலாகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. 3 லட்சத்துக்கு கீழே இறங்கிய கொரோனா ஒருநாள் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
25 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழே இறங்கி உள்ளது. அதே சமயத்தில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
3. ஓமனில், ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா; 13 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; வெளிநாட்டினர் தைவான் வர தடை விதிப்பு
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
5. தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடலாம்; குடியிருப்பு வளாகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும் மாநகராட்சி அனுமதி
தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.