செய்யூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து; 2,500 கோழிகள் கருகின
செய்யூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,500 கோழிகள் தீயில் கருகின.
தீ விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட சாலையூரில் புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படுகிறது. நேற்று மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயில் கருகி சாவுதகவல் அறிந்த செய்யூர் தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பண்ணையில் இருந்த 2 ஆயிரத்து 500 கோழிகள் தீயில் கருகி இறந்தன.இது குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story