சென்னை கொரட்டூரில் மின்கசிவால் 3 கடைகளில் தீ விபத்து


சென்னை கொரட்டூரில் மின்கசிவால் 3 கடைகளில் தீ விபத்து
x
தினத்தந்தி 20 April 2021 9:58 AM GMT (Updated: 2021-04-20T15:28:14+05:30)

சென்னை கொரட்டூர், கெனால் சாலை, சந்தோஷ் நகரில் உள்ள ஒரு கடையில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, வில்லிவாக்கம், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

அதற்குள் தீ மளமளவென அருகில் இருந்த மேலும் 2 கடைகளுக்கு பரவியது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி 3 கடைகளிலும் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் விளையாட்டு பொருட்கள், தண்ணீர் கேன்கள் மற்றும் மருந்து கடை என அடுத்தடுத்த 3 கடைகளும் எரிந்து நாசமாயின. இதுபற்றி கொரட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

Next Story