கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது; 300 மதுபாட்டில்கள் பறிமுதல்


கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது; 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2021 6:18 PM IST (Updated: 10 May 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில், திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திடீர் சோதனை

கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, எளாவூர் ரெயில்வே மேம்பாலம், பெத்திக்குப்பம், கவரைப்பேட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, நாயுடுகுப்பம், தலையாரிப்பளையம் ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

10 பேர் கைது

அப்போது மேற்கண்ட இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கும்மிடிப்பூண்டியைசேர்ந்த முருகன் (வயது 28), சிவகுமார் (36), தடாவை சேர்ந்த ராஜேஷ் (29), மங்காவரத்தை சேர்ந்த பாலாஜி (36), கூடூரைசேர்ந்த திருஞானசம்மந்தம் (39), மாதர்பாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (47), குருத்தானமேடுவை சேர்ந்த கஜபதி (37), பாதிரிவேட்டை சேர்ந்த திருப்பதி (50), ஓபசமுத்திரத்தை சேர்ந்த மருதுபாண்டி (32) மற்றும் தலையாரிப்பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (60) ஆகிய 10 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 300 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 


Next Story