18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 23 May 2021 8:24 AM IST (Updated: 23 May 2021 8:24 AM IST)
t-max-icont-min-icon

18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

பூந்தமல்லி,

கொரோனா தாக்கம் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதனை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். அப்போது பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக காசோலைகளை வழங்கினார்கள். பின்னர் அங்குள்ள தொழிற்சாலைகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
1 More update

Next Story