தமிழகத்திலேயே காஞ்சீபுரம் மாவட்டம் முதல் இடம்: 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8.51 சதவீதம் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


தமிழகத்திலேயே காஞ்சீபுரம் மாவட்டம் முதல் இடம்: 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8.51 சதவீதம் கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2021 6:23 AM IST (Updated: 7 Jun 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8.51 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள முதலில் பொதுமக்கள் தயக்கம் காட்டினாலும் அதன் பின்னர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதில் 18 வயதுக்கு மேற்பட்டு 45 வயதுக்குள் 37 ஆயிரத்து 400 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சத்து 6 ஆயிரத்து 560 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8.51 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் முதலிடம் வகிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி தட்டுப்பாடு

மேலும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தமிழக அரசு அளித்த 9 ஆயிரம் தடுப்பூசிகள் கடந்த 3 நாட்களில் போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தடுப்பூசி ேநற்றுடன் நிறைவடைந்தது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இன்று (திங்கட்கிழமை) தமிழக அரசிடமிருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே அனைத்து முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story