காஞ்சீபுரத்தில் கடைகளில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்


காஞ்சீபுரத்தில் கடைகளில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 8 Jun 2021 6:28 AM IST (Updated: 8 Jun 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கடைகளில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 2 வாரங்கள் ஆன நிலையில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், காஞ்சீபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், மின்சாதன பொருட்கள் கடை போன்றவை செயல்பட தொடங்கி உள்ளன.

கொரோனா தொற்று அதிகரிக்கும்

இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் பொருள்களை வாங்க கடைகளில் குவிந்து வருகின்றனர்.

இதனால் காஞ்சீபுரத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story