கருணாநிதி பெயரில் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் நூல் நிலையம் அமைக்க கூடாது


கருணாநிதி பெயரில் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் நூல் நிலையம் அமைக்க கூடாது
x
தினத்தந்தி 1 Aug 2021 8:22 PM IST (Updated: 1 Aug 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி பெயரில் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் நூல் நிலையம் அமைக்க கூடாது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மாவட்டத்தில் வறட்சி எல்லாம் நீக்கி பசுமையை நிலைக்கச் செய்தார் ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக். அரசு கட்ட மறுத்த அணையை, தன் சொந்த செலவில் நாட்டு மக்களுக்காக கட்டிக் கொடுக்க முன்வந்த வாழும் மனித தெய்வமாக வணங்கப்படுபவர் பென்னிகுவிக். அவருக்கு மதுரை நத்தம் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் நினைவு மண்டபம் கட்டி பெருமை சேர்க்கப்பட்டது.

இந்தநிலையில் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் கருணாநிதி பெயரில் ஒரு நூல் நிலையம் அமைக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.

பென்னிகுவிக்கின் நினைவு மண்டபத்தில் இந்த நூல் நிலையம் அமைய வேண்டுமா? புத்தகங்கள் வரலாற்றுப் பெட்டகங்கள் தான், ஆனால் அது இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை அழித்து உருவாக்கப்பட வேண்டுமா?

எனவே கருணாநிதி பெயரால் அமையும் நூலகத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இதைத் தான் கருணாநிதியின் ஆன்மாவும் விரும்பும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story