கொரோனா தடுப்பூசி முகாமில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு


கொரோனா தடுப்பூசி முகாமில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Sept 2021 4:49 PM IST (Updated: 27 Sept 2021 4:49 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூரில் கொரோனா தடுப்பூசி முகாமில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்துள்ள ஆணைப்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை முதலே வரிசையில் நின்று 130-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

அப்போது பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேற்கூரை விழுவதற்கு முன்பாக அங்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் காத்திருந்தனர். மதிய உணவு இடைவேளை என்பதால் பொதுமக்கள் அப்போது அங்கு இல்லை.

டாக்டர்களும், நர்சுகள் மட்டுமே இருந்தனர். இந்தப் பள்ளிக்கூடம் 1957-ல் கட்டப்பட்டது. இதனை சீரமைக்க பொதுமக்கள் மனுக்களும் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஆகையால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story