காந்தி ஜெயந்தி: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் இயக்கம்


காந்தி ஜெயந்தி: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2021 11:18 AM GMT (Updated: 1 Oct 2021 11:18 AM GMT)

காந்தி ஜெயந்தி: ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.

திருவள்ளூர்,

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடு முழுவதும் நாளை (2-ந்தேதி) காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி நாளில் சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, கடற்கரை-காஞ்சீபுரம்-திருமால்பூர், கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-திருத்தணி-அரக்கோணம், கடற்கரை-கடம்பத்தூர்-திருவள்ளூர், கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், கடற்கரை-ஆவடி, கடற்கரை-பொன்னேரி, கடற்கரை-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை, மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை, ஆவடி-பட்டாபிராம் இடையே ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story