3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலி


3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலி
x
தினத்தந்தி 13 Oct 2021 12:12 AM GMT (Updated: 13 Oct 2021 12:12 AM GMT)

திருவொற்றியூரில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலியானார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கிழக்கு எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீட்டின் 3-வது மாடியில் வசித்து வந்தவர் நந்தகுமார் (வயது 34). ரெயில்வே ஊழியரான இவர், சென்னை தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி, ராயப்பேட்டையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த நந்தகுமார், நேற்று மதியம் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தார். திடீரென நிலைதடுமாறி 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்.

சாவு

இதில் படுகாயம் அடைந்த நந்தகுமார், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சாத்தாங்காடு போலீசார், பலியான நந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார் குடிபோதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது அவரே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story