செங்கல்பட்டு அருகே கனமழையால் வீடுகள் இடிந்தன
செங்கல்பட்டு மாவட்டம் திருமணி அடுத்த பாரதபுரம் பகுதியில் கனமழையின் காரணமாக 5 வீடுகள் இடிந்து விழுந்தது.
தொடர்மழை
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.இதனால் அனேக இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திருமணி அடுத்த பாரதபுரம் பகுதியில் நேற்று 5 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் வீடுகளில் தங்கி இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இது போல் மேலமையூர், ஆலப்பாக்கம் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. குண்டூர் ஏரி நிர் வேதாசலம் நகர் ஜி.எஸ்.டி. சாலையில் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதித்தது. சிங்கப் பெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விஞ்சியம்பாக்கம் ஏரியின் உபரிநீர் வழிந்து ஒடியதால் 2 நாட்களாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
குண்டும், குழியுமான சாலைகள்
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு நேரில் வந்த ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் கால்வாய் மற்றும் ஏரியின் மதகை ஆய்வு செய்தார்.
தொடர்மழையின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய 4 வழி நெடுஞ்சாலையில் பல இடங்களில் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது.
Related Tags :
Next Story