அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை


அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2021 12:22 PM IST (Updated: 3 Dec 2021 12:24 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை,

அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் வரும் 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 

தேர்தல் முடிவு அன்றைய தினம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று பிற்பகல் 2 மணிகு விசாரணைக்கு வர உள்ளது.

Next Story