செங்கல்பட்டு மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் உரிமம் ரத்து: வேளாண்மை அதிகாரி


செங்கல்பட்டு மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் உரிமம் ரத்து: வேளாண்மை அதிகாரி
x
தினத்தந்தி 16 Dec 2021 12:54 PM GMT (Updated: 16 Dec 2021 12:54 PM GMT)

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொட்டாஷ் உர மூட்டையின் விலை ரூ.1,700 என உயர்த்தப்பட்டுள்ளது, இந்த விலை ஏற்றம் கடந்த 8-ந் தேதிக்கு பின் புதிதாக வந்துள்ள பொட்டாஷ் உரத்திற்கு மட்டும் பொருந்தும், ஏற்கனவே இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டையினை மூட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி ரூ.1,040 என்ற விலைக்கே விற்பனை செய்ய வேண்டும்.

இருப்பில் உள்ள பொட்டாஷ் உர மூட்டைகளை ரூ.1,040க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை உறுதி செய்திட மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கண்காணிப்பின்போது, பழைய பொட்டாஷ் உர மூட்டைகள் கூடுதல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தன.


Next Story