தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தேர்தல் முன்விரோதமா? போலீசார் விசாரணை
காஞ்சீபுரம் அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தேர்தல் முன்விரோதமா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை,
காஞ்சீபுரத்தை அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சைலஜா. கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். தி.மு.க. பிரமுகரான சேகர், தனது மோட்டார் சைக்கிளில் கோனேரிக்குப்பத்தில் உள்ள தலையாரி தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் படுகாயம் அடைந்த சேகரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேர்தல் முன்விரோதமா?
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் ஆகியோர் சம்பவ இடத்து விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து தேர்தல் முன் விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story