"பிரதமர் மோடி பதவியேற்புக்கு பிறகு பாகுபாடின்றி முன்னேறி வருகிறோம்" - கவர்னர் ஆர்.என்.ரவி


பிரதமர் மோடி பதவியேற்புக்கு பிறகு பாகுபாடின்றி முன்னேறி வருகிறோம் - கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 11 March 2022 11:49 AM IST (Updated: 11 March 2022 12:49 PM IST)
t-max-icont-min-icon

தென் மண்டல துணை வேந்தர்களின் கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

கோவை,

கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்களின் கருத்தரங்கு இன்று நடைபெற்று வருகிறது. இதில் கருத்தரங்கில் கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களை சேர்ந்த 75 துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

தரமான, சமமான, உறுதியான கல்வியை வழங்க வேண்டும் என்ற மையக்கருத்தோடு இந்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில், பசியின்மை, வறுமையின்மை, தூய்மையான குடிநீர், சுகாதாரம், சமத்துவம், பருவநிலை செயல்பாடு, நிலம்சார் வாழ்க்கை உள்ளிட்ட 17 தலைப்புகளின் கீழ் விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி, பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் மற்றும் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,  நாட்டின் முன்னேற்றத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மக்களுக்கு சேர வேண்டிய நிதி மக்களுக்கு நேரடியாக செல்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி பதவியேற்புக்கு பிறகு பாகுபாடின்றி முன்னேறி வருகிறோம் என்று கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

Next Story