காஞ்சீபுரத்தில் மேலும் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு


காஞ்சீபுரத்தில் மேலும் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 29 March 2022 6:35 PM IST (Updated: 29 March 2022 6:35 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேலும் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்.


கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் 31 இடங்களிலும், ஓரகடம் சந்திப்பில் 110 இடங்களிலும் குற்றச்சம்பவங்கள், சமூக விரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் முயற்சியால் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. பழைய குற்றவாளிகள் புகைப்படம் ‘சாப்ட்வேர்’ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழைய குற்றவாளிகள் நடமாட்டத்தை எளிதில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இந்த அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.

5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் பேசியதாவது:-

அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க போலீசாருக்கு உறுதுணையாக இருக்கும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடந்த சில மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 125 உயர் தர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது போன்று மேலும் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட போலீஸ்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் கோர்ட்டில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவியல் ஆதாரம் என்பதாலும், நகரம் முதல் கிராமம் வரை உள்ள அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, தொழில் நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story