ஒடிசா: ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்ட பணிகள்; நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி,
ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுவது மற்றும் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாளை கலந்து கொண்டு அவற்றை தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லியில் இருந்து நாளை மதியம் காணொலி காட்சி வழியே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், ஒடிசாவின் பூரி மற்றும் ஹவுரா இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதன்பின் பூரி மற்றும் கட்டாக் ரெயில்வே நிலையங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த மறுகட்டமைப்புடன் கூடிய ரெயில் நிலையங்கள், அனைத்து வித நவீன வசதிகளையும் உள்ளடக்கி, ரெயில் பயணிகளுக்கு உலக தரம் வாய்ந்த அனுபவம் வழங்கும்.
Related Tags :
Next Story