மராட்டியம்: பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - ஒருவர் பலி, 3 பேர் காயம்


மராட்டியம்: பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - ஒருவர் பலி, 3 பேர் காயம்
x

மராட்டிய மாநிலம் புனேவில் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம், புனேவில் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மராட்டிய மாநில அரசு பேருந்து ஒன்று புனே நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 12.30 மணியளவில் புனே-சாஸ்வாட் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story