ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி


ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
x

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒடிசா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மி.மீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தின் 6 மாவட்டங்களில் கனமழையின்போது மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பவுத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தவிர, குர்தாவில் மின்னல் தாக்கியதில் 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே மக்களை பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லும்படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story