10 ஆண்டுகள் ஆட்சி வெறும் டிரெய்லர்தான்: பிரதமர் மோடி பேச்சு


10 ஆண்டுகள் ஆட்சி வெறும் டிரெய்லர்தான்: பிரதமர் மோடி பேச்சு
x

Image Courtesy: PTI

ரெயில்வேயில் 100% மின்மயமாக்கலை நோக்கி பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:-

2014-ம் ஆண்டைக் காட்டிலும் நாட்டின் பட்ஜெட் 6 மடங்கு அதிகரித்துள்ளது. ரெயில்வே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயரும். ரெயில்வேயை மோசமான நிலையில் இருந்து மீட்டெடுத்ததன் மூலம் தனது தலைமையிலான மத்திய அரசு மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் முக்கிய பணிகளில் ரெயில்வே மேம்பாடும் ஒன்றாக இணைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகள் நடந்தது வெறும் டிரைலர்தான். இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சித் திட்டங்கள் மத்தியில் ஆட்சியமைப்பதற்காக அல்ல, மாறாக பரந்த பாரதத்தை அமைப்பதற்காக நாம் எதிர்கொண்ட போராட்டங்களை நமது எதிர்கால சந்ததியினர் சந்திக்கக் கூடாது.

வந்தே பாரத் ரெயில்களின் வழித்தடத்தை மத்திய அரசு தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. நாட்டில் தற்போது 250 மாவட்டங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில்வேயில் 100% மின்மயமாக்கலை நோக்கி பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story