டெல்லியில் 113 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 303 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 303 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் தற்போது 1,097 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story