பா.ஜ.க. ஆட்சியில் 1.5 லட்சம் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பா.ஜ.க. ஆட்சியில் 1.5 லட்சம் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர் என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேசத்தில் மண்ட்லா நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், வைரலாகி வரும் வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டும். மத்திய பிரதேசத்திலேயே, நாட்டில் அதிக அளவில் காணாமல் போகும் இளம்பெண்களின் எண்ணிக்கை பதிவாகிறது.
பா.ஜ.க. ஆட்சியில் 1.5 லட்சம் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர். தினமும் 17 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன. உஜ்ஜைன் சம்பவம் பற்றி நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்முறைகளை கவனத்தில் கொள்ளும்போது, நாட்டில் மத்திய பிரதேசமே முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் நிலைமை கடினம் வாய்ந்துள்ளது என்று பேசியுள்ளார்.
Related Tags :
Next Story