கர்நாடகாவில் மேலும் 175 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு
கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
பெங்களூரு,
கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.
கடந்த மாதம் டிசம்பர் 5-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜேஎன்.1 வைரஸ் பரவல் சற்று அதிகமாகி உள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று மேலும் 175 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் ஜே.என்.1 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 374ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story