கொல்லத்தில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 55 பேர் படுகாயம்


கொல்லத்தில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 55 பேர் படுகாயம்
x

கொல்லத்தில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 55 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாலக்காடு,

கேரள மாநிலம் திருச்சூர் நகரிலிருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் கொல்லம் மாவட்டம் கடய்கல் பகுதியில் வந்தபோது திருவனந்தபுரத்திலிருந்து ஆலப்புழாவை நோக்கி வந்த சுற்றுலா பஸ்சும், கேரள அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் 2 பஸ்களும் பலத்த சேதமடைந்தது. பஸ்சில் இருந்த அனைவரும் சத்தம் போட்டு கத்தினார்கள்.

மேலும் விபத்தில் 55 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அஙகு ஓடோடி சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் இதுபற்றி அறிந்ததும்போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அஞ்சல மூடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ்கள் 2-ம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து அஞ்சல் மூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story