நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் 2 பேர் பலி, 4 பேர் காயம்
மற்றொரு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
புதுடெல்லி,
டெல்லியின் கரோல் பாக் பகுதிக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று வெல்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பழுதானது. இதனால், அங்கேயே ஓரமாக நிறுத்தப்பட்டது.
அப்போது அதிகாலையில் மற்றொரு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் லாரியின் உதவியாளர்களான ரவி மற்றும் சதீஷ் சம்பவத்தில் இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story