ராஜஸ்தானின் கோட்டா நகரில் 2 நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை


ராஜஸ்தானின் கோட்டா நகரில் 2 நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை
x

2023-ம் ஆண்டில் கோட்டா நகரில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

கோட்டா,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மைய நகரில் ஏராளமான மாணவர்கள் தங்கி பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். உத்தரபிரதேசத்தின் ஜாவுன்பூர் நகரை சேர்ந்த ஆதித்யா சேத் என்ற 17 வயது மாணவரும், விக்யான் நகர் 2-வது செக்டாரில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தான்.

இந்த நிலையில் ஆதித்யாசேத், நேற்று முன்தினம் இரவில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தான். சிறந்த மாணவரான ஆதித்யா சேத், 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நீட் பயிற்சிக்கு கோடா நகருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல உதய்பூரை சேர்ந்த மெகுல் வைஷ்ணவ் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். அவர் 10-ம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண் பெற்ற நிலையில் நீட் பயிற்சி பெற்று வந்தார். இந்த இரு மாணவர்களின் இறப்பையும் சேர்த்து, 2023-ம் ஆண்டில் கோட்டா நகரில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story