தொழிலாளி கொலையில் 2 பேர் கைது


தொழிலாளி கொலையில் 2 பேர் கைது
x

பெலகாவியில், தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ஜெய்னாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுனில் சாலுகே (வயது 33). இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி ஆவார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி ஜெய்னாபுரா அருகே உள்ள கரோஷி என்ற கிராமத்தில் ரத்தவெள்ளத்தில் சுனில் இறந்து கிடந்தார். அவரை மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து சிக்கோடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சுனிலை கொலை செய்ததாக அவரது நண்பர் மகாந்தேஷ், அவரது உறவினர் ராஜூ ஆகியோரை சிக்கோடி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் மகாந்தேசுக்கு திருமணம் ஆகி இருந்தது.

மகாந்தேசின் மனைவி மீது கண் வைத்த சுனில், மகாந்தேசிடம் உனது கடனை அடைக்க நான் உதவி செய்கிறேன். உனது மனைவியை என்னுடன் உல்லாசமாக இருக்க அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சுனிலை மகாந்தேஷ், ராஜூவுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்து உள்ளது. கைதான 2 பேர் மீதும் சிக்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story