வதேரா மீதான நில ஒதுக்கீடு புகார்: விசாரணை பற்றி நீதிபதி பரபரப்பு தகவல்


வதேரா மீதான நில ஒதுக்கீடு புகார்: விசாரணை பற்றி நீதிபதி பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2017 10:15 PM GMT (Updated: 11 Jun 2017 8:32 PM GMT)

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்பட பலருக்கு

புதுடெல்லி,

கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது குறித்து நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையிலான கமி‌ஷன் விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக 182 பக்க அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது.

இந்த நிலையில் நீதிபதி எஸ்.என்.திங்ரா தனது விசாரணை குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘விசாரணை கமி‌ஷன் அறிக்கையில் உள்ள உண்மையான தகவல்கள் ஒரு நாள் தெரியவரும். அப்போது அதிகாரிகள் பலர் செய்த முறைகேடுகள் வெளியே வரும்’ என்று தெரிவித்தார். நீதிபதியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story