காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இத்தாலி செல்கிறார்


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இத்தாலி செல்கிறார்
x
தினத்தந்தி 13 Jun 2017 1:50 PM GMT (Updated: 13 Jun 2017 1:50 PM GMT)

தனது தாய்வழிப்பாட்டியை சந்திக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இத்தாலி பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தாய்வழிப்பாட்டியை சந்திக்க இத்தாலி செல்ல உள்ளார். இந்த தகவல் ராகுல் காந்தியின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:- இத்தாலியில் இருக்கும் என் தாய் வழி பாட்டி மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்திக்க இத்தாலிக்கு விரைவில் செல்ல உள்ளேன். அவர்களுடன் சில நாட்கள் அங்கு தங்கி இருந்து விட்டு நாடு திரும்புவேன்’  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் முன்மொழிந்தனர். தற்போதைய தலைவர் சோனியா காந்தியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த கருத்தை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி இத்தாலி செல்ல உள்ளார். 

ராகுல் காந்தியின் இத்தாலி பயணத்தை ஆளும் பாரதீய ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது. தனது வெளிநாட்டு பயணங்களின் இடைவெளியில் ராகுல் காந்தி இந்தியா வருகை தருவதாக பாஜக செய்தி தொடர்பாளர் நரசிம்மா ராவ் விமர்சித்துள்ளார். ஆனால், பாஜகவின் விமர்சனம் தேவையற்றது என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. 

Next Story