எல்லையில் தினமும் 5-6 பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் கொல்கின்றனர்; ராஜ்நாத்சிங்


எல்லையில் தினமும் 5-6 பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் கொல்கின்றனர்; ராஜ்நாத்சிங்
x
தினத்தந்தி 9 Oct 2017 5:42 AM GMT (Updated: 9 Oct 2017 5:42 AM GMT)

எல்லையில் தினமும் 5 முதல் 6 பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டுக்கொல்வதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பணியாற்றும் இந்திய வீரர்கள் தினமும் ஐந்து முதல் ஆறு பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்கின்றனர் என்றும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் வீரர்களை கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜ்நாத்சிங் கூறியதாவது;- “ அண்டை நாடு இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊருவ வைக்கிறது. நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளில் ஐந்து முதல் ஆறுபேரை தினமும் சுட்டுக்கொல்கின்றனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது முதல் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்று நான் வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேவேளையில், பாகிஸ்தான் வீரர்கள் தாக்கினால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்காமல் விடக்கூடாது என்று வீரர்களிடம் தெரிவித்துள்ளேன்” என்றார். 

டோக்லாம் விவகாரம் பற்றி பேசிய ராஜ்நாத்சிங், “ இந்தியா பலவீனமான நாடு இல்லை. இந்தியா மிகவும் வலுவான நாடாகும். உலக நாடுகள் அனைத்தும் இந்தியா-சீனா இடையேயான மோதலை உற்று நோக்கி பார்த்த நிலையில், டோக்லாம் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இந்திய பலவீனமான நாடாக இருந்திருந்தால் சீனாவுடனான டோக்லாம் பிரச்சினையை தீர்க்கும் இடத்தில் இந்தியா இருந்திருக்காது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story