ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 விமானப்படை வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் 2 விமானப்படை வீரர்கள் பலியாகினர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹஜின்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாகிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்த இரண்டு விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story