காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது


காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் கைது
x
தினத்தந்தி 16 Oct 2017 9:45 PM GMT (Updated: 16 Oct 2017 8:45 PM GMT)

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் காசிகுந்த் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை பாதுகாப்புபடையினர் வழக்கமான ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீநகர்,

அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பாதுகாப்புபடையினரின் ஆயுதங்களை பறித்து செல்ல முற்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் சுதாரித்துக்கொண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கு உள்ள ஒரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது போலீசாரிடம் சிக்கினர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்களுடைய பெயர் குர்சீத் அகமது தார், ஹாசிக் ரத்தர் என்பதும் அவர்கள் இருவரும் லஷ்கர்–இ–தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களுடைய இடத்துக்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கை துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு சம்பவமாக குல்காமில், டிரால் என்ற இடத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது ரமீஸ் யாத்து என்கிற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், தனியார் செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story