காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்


காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது ராகுல் காந்தி புதிய தலைவராகிறார்
x
தினத்தந்தி 19 Nov 2017 12:00 AM GMT (Updated: 18 Nov 2017 7:42 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி இல்லத்தில் நாளை நடக்கிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் தேதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல்காந்தி அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தலைவருக்கான போட்டியில் அவர் ஒருவர் மட்டுமே வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஒரு வழக்கமான காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை. சோனியா காந்தி கட்சி தலைவர் தேர்தலுக்கு கட்சியின் ஒப்புதலை பெறவேண்டும் என்று முடிவெடுத்ததாலேயே இந்த கூட்டம் நடைபெறுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.


Next Story