வாரிசுதாரர் வேலைக்கு கல்வித்தகுதி தேவை இல்லை ரெயில்வே வாரியம் முடிவு


வாரிசுதாரர் வேலைக்கு கல்வித்தகுதி தேவை இல்லை ரெயில்வே வாரியம் முடிவு
x
தினத்தந்தி 18 April 2018 10:30 PM GMT (Updated: 18 April 2018 8:56 PM GMT)

ரெயில்வேயில் ‘டி’ பிரிவு ஊழியர்கள் பணிக்காலத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நோய் காரணமாக ஓய்வு பெற்றாலோ வாரிசுதாரரான அவர்களது மனைவிக்கு வேலை வழங்கப்படுகிறது.

புதுடெல்லி,

குறைந்த பட்ச கல்வித்தகுதியாக அவர் 10–ம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற பல சம்பவங்களில் வாரிசுதாரருக்கு குறிப்பிட்ட கல்வித்தகுதி இல்லை என பல்வேறு ரெயில்வே கோட்டங்களில் இருந்து ரெயில்வே வாரியத்துக்கு புகார்கள் வந்தன.

இதுபற்றி ரெயில்வே வாரியம் துறை அமைச்சகத்துடன் தீவிர ஆலோசனை நடத்தியது. அதன்பின்னர், இந்த பிரிவில் குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற விதியை நீக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் அனைத்து கோட்டங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.


Next Story