கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட காங்.தலைவர்கள் தர்ணா


கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா உள்ளிட்ட காங்.தலைவர்கள்  தர்ணா
x
தினத்தந்தி 17 May 2018 9:47 AM IST (Updated: 17 May 2018 9:47 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் சித்தராமையா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பெங்களூரு, 

பல்வேறு சர்ச்சைக்களுக்கு இடையே, கர்நாடக மாநில முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 

சித்தராமையாவுடன் அசோக் கெலாட், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போரட்டத்தில் கலந்து கொள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பிடதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் புறப்பட்டுள்ளனர். 

1 More update

Next Story