அசாமில் ஒரே நாள் இரவில் 7 கோவில்களில் கொள்ளை


அசாமில் ஒரே நாள் இரவில் 7 கோவில்களில் கொள்ளை
x
தினத்தந்தி 24 Nov 2018 6:37 PM IST (Updated: 24 Nov 2018 6:37 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் ஒரே நாள் இரவில் 7 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கம்ரூப் (நகரம்) மாவட்டத்தில் சுவால்கச்சி நகரில் 100 ஆண்டுகள் பழமையான சித்தேஸ்வர் தேவாலயா என்ற கோவில் உள்ளது.  நேற்றிரவு இங்கு வந்த திருடர்கள் 2 பழமையான சிலைகள் மற்றும் கோவிலில் இருந்த விலைமதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கோவிலில் இதற்கு முன்பும் 2 முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.  ஆனால் போலீசாரால் குற்றவாளிகளை பிடிக்கவோ அல்லது திருடப்பட்ட பொருட்களை மீட்கவோ முடியவில்லை.

இதேபோன்று கவுகாத்தி நகரில் மலிகாவன் பகுதியில் அருகருகே உள்ள 5 கோவில்களில் நேற்றிரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கோவிலின் நன்கொடை பெட்டியில் இருந்த பணம் மற்றும் பிற விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

இதேபோன்று நகாவன் மாவட்டத்தில் ரந்தாலி நகரில் உள்ள கோவிலில் இருந்தும் சிலைகள் மற்றும் பிற விலைமதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
1 More update

Next Story