சர்வதேச எல்லைக்கு சாலை: இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் வரவேற்பு


சர்வதேச எல்லைக்கு சாலை: இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் வரவேற்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 6:30 PM GMT (Updated: 2018-11-25T23:36:54+05:30)

சர்வதேச எல்லைக்கு சாலை அமைக்க உள்ள இந்தியாவின் முடிவுக்கு, பாகிஸ்தான் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கர்தார்பூரில் உள்ள சீக்கிய குருத்வாராவில் சீக்கிய மத குரு குருநானக் சமாதி அமைந்துள்ளது. அங்கு புனித பயணம் செல்லும் சீக்கியர்கள் எளிதாக சென்றுவர சர்வதேச எல்லை வரை சாலையை மேம்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த சாலை போடுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.

இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷா மெகமுத் குரேஷி கூறுகையில், ‘‘சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு 2 மத்திய மந்திரிகளை அனுப்பி வைப்பது பாராட்டத்தக்கது. சீக்கியர்களை அரவணைக்க பாகிஸ்தான் அரசு எடுக்கும் முன்முயற்சிகளுக்கு இந்தியா சாதகமான பதிலை அளித்துள்ளதாக கருதுகிறோம்’’ என்றார்.
Next Story