எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை 7-வது நாளாக முடக்கம்


எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை 7-வது நாளாக முடக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2018 7:48 AM GMT (Updated: 19 Dec 2018 7:48 AM GMT)

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மாநிலங்களவை 7-வது நாளாக முடங்கியது.

புதுடெல்லி,

பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலங்களவையில் இன்றும் ரபேல் விவகாரம், காவிரி விவகாரம் ஆகியவையால் கடும் கூச்சல் குழப்பம் நீடித்தது. 

ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி,  காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதே கோரிக்கைகள் வலியுறுத்திய பதாகைகளையும் கையில் ஏந்திய படி, அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் மேகதாது பிரச்சினையை எழுப்பி அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டதையும் மீறி அமளி நீடித்தது. இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story