ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Jan 2019 6:31 PM GMT (Updated: 15 Jan 2019 6:31 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #PChidambaram #DelhiHighCourt

புதுடெல்லி,

ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி ஜனவரி 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Next Story