ஒருங்கிணைப்பாளர் பதவிகள்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்


ஒருங்கிணைப்பாளர் பதவிகள்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 18 Feb 2019 9:45 PM GMT (Updated: 2019-02-19T01:34:25+05:30)

ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கக்கோரும் விண்ணப்பத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்கக்கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யோகேஷ்கன்னா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் இந்த மனு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மே 13-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Next Story