மிகச்சிறந்த நிர்வாகி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்


மிகச்சிறந்த நிர்வாகி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
x
தினத்தந்தி 24 Feb 2019 9:44 AM IST (Updated: 24 Feb 2019 2:39 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று, அவரை புகழ்ந்து பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

புதுடெல்லி, 

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் இன்று ஆகும். இரும்புப் பெண்மணி, புரட்சித்தலைவி, அம்மா என்றெல்லாம் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை அவரது கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று, பிரதமர் மோடி அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து புகழ்ந்துள்ளார். 

தனது டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ ஜெயலலிதாவுக்கு அவரது பிறந்த தினத்தில் அஞ்சலி செலுத்துகின்றேன். தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்கு பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். மிகச்சிறந்த நிர்வாகி, கருணை உள்ளம் படைத்தவரான ஜெயலலிதாவின் நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயன்பெற்றனர்” என்று தெரிவித்துள்ளார். 


1 More update

Next Story