ரபேல் ஒப்பந்த முறைகேட்டில் தொடர்பு: பிரதமர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் - காங்கிரஸ் கோரிக்கை
ரபேல் ஒப்பந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது அம்பலமாகி இருப்பதால் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
புதுடெல்லி,
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான இந்திய பேச்சுவார்த்தை குழுவின் அறிக்கை வெளியானது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
ரபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் வெளியாகி உள்ளன. ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் பலனடையும் வகையில் பிரதமர் மோடி தனது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ரபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள அப்பட்டமான, பெரிய அளவிலான ஊழல் இப்போது தெளிவாக தெரிந்துவிட்டது. இதிலிருந்து டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு வரம்புமீறிய பலன்கள் கிடைக்க பிரதமர் மோடி தனது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக தெரிகிறது.
இது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்வதற்கான தெளிவான ஆதாரம். எனவே பிரதமர் மோடி மற்றும் இதில் தொடர்புடைய மற்ற தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. எனவே உயர்ந்தபட்ச அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்பட அனைவர் மீதும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக உரிய காலத்திற்குள் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்திய பேச்சுவார்த்தை குழுவின் அறிக்கையில் கூறியுள்ளதை பார்க்கும்போது, மோடி தேச பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் ரபேல் மர்ம ஒப்பந்தத்தில் உள்ள அப்பட்டமான ஊழலை மறைத்ததன் மூலம் நாடாளுமன்றத்தில் தவறான தகவலை வெளியிட்டதுடன், நாட்டையும் ஏமாற்றி உள்ளார்.
பா.ஜனதா அரசு 36 விமானங்கள் வாங்குவதற்கான தொகை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 விமானங்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்த தொகையைவிட அதிகம். ஆனால் பிரதமர் மோடி அதனை மாற்றி முந்தைய அரசின் விலையைவிட இப்போது குறைவாக வாங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார். அதோடு ரூ.4305 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் நீக்கியுள்ளார்.
இதில் உள்ள சதி இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இந்திய பேச்சுவார்த்தை குழுவை புறக்கணித்து மோடி நேரடியாக பிரான்சுடன் பேசியுள்ளார். இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் குழுவில் இடம்பெறாத தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யார்? பிரதமர் மோடியின் நேரடி உத்தரவின் பேரில் பிரதமர் அலுவலகமும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story