ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் ஒருவர் கடத்தல்: பதற்றம்


ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் ஒருவர் கடத்தல்: பதற்றம்
x
தினத்தந்தி 8 March 2019 11:43 PM IST (Updated: 8 March 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JammuKashmir #ArmyJawan #kidnapped

ஸ்ரீநகர்,

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

இத்தகைய சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.  

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் உள்ள குவாஜிபுரா சதோரா பகுதியில் உள்ள ராணுவ வீரர் முகமது யாசின் என்பவரை அவரது வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் இன்று மாலை கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணுவ வீரர் முகமது யாசின் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி முதல் விடுப்பில் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முகமது யாசினை மீட்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story