தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது


தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது
x
தினத்தந்தி 9 March 2019 12:35 AM IST (Updated: 9 March 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரத்துக்கு சிறப்பாக சேவை செய்த பெண்கள் மற்றும் அமைப்புகளுக்கு ‘நாரி சக்தி புரஸ்கார்’ என்ற பெண்களுக்கான உயரிய விருதை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதுக்கு தமிழ்நாடு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துறை, நாட்டின் ஒரே கமாண்டோ பெண் பயிற்சியாளர் சீமா ராவ் உள்பட 44 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெண்கள் தினத்தையொட்டி, இவ்விருதுகள் வழங்கும் விழா நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்கினார். விழாவில், மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி கலந்து கொண்டார்.


Next Story