வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரி மனு - தேர்தல் கமிஷனை அணுகும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கக்கோரிய மனு மீதான வழக்கில், தேர்தல் கமிஷனை அணுகும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், வக்கீலுமான அஷ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அப்துல் நசீர், சஞ்சீவ்கன்னா ஆகியோர், மனுதாரர் முதலில் தேர்தல் கமிஷனில் மனு கொடுக்க வேண்டும். அவர்கள் பதில் கொடுத்த பின்னரும் அதில் திருப்தியில்லை என்றால் மனுதாரர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Tags :
Next Story