தேர்தல் பிரசாரம் செய்ய யோகிக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்


தேர்தல் பிரசாரம் செய்ய யோகிக்கு  தடை விதித்தது தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 15 April 2019 2:56 PM IST (Updated: 15 April 2019 5:42 PM IST)
t-max-icont-min-icon

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

யோகி ஆதித்யநாத்தும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் உ.பி.யில் மதத்தின் அடிப்படையில் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது. அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுத்துள்ளது.
 யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணியிலிருந்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது. மாயாவதி நாளை காலை 6 மணியிலிருந்து 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story