பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி - ஐக்கிய ஜனதாதளம் உறுதி


பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி - ஐக்கிய ஜனதாதளம் உறுதி
x
தினத்தந்தி 9 Jun 2019 4:00 AM IST (Updated: 9 Jun 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி உறுதி என ஐக்கிய ஜனதாதளம் தெரிவித்துள்ளது.

பாட்னா,

மத்திய பா.ஜனதா அரசில், ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு போதிய இடம் ஒதுக்காதது தொடர்பாக பா.ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இடையே உரசல் ஏற்பட்டு இருந்தது. எனவே பீகாரில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் சட்டசபை தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற சந்தேகம் அரசியல் வல்லுனர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் இந்த சந்தேகங்களுக்கு ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார். மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம் என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

மத்திய மந்திரி சபையில் சேராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பா.ஜனதாவுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகவும், மந்திரி சபையில் அடையாள பிரதிநிதித்துவம் தேவை இல்லை என்றும் கூறினார்.

Next Story