கடனை வசூல் செய்ய அடியாட்களை நியமிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை - மத்திய மந்திரி தகவல்
கடன் வசூலிப்பதற்காக அடியாட்களை நியமிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை என மத்திய மந்திரி அனுராக் தாக்குர் கூறினார்.
புதுடெல்லி,
வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் அடியாட்களை நியமிக்கும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
வாடிக்கையாளர்களிடம் இருந்து நியாயமான முறையில் கடனை திரும்ப வசூலிப்பதற்காக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. இந்த அடிப்படையில் கடனை திரும்ப பெற வேண்டும்.
கடனை திரும்ப பெறும் விவகாரத்தில் வாடிக்கையாளர்களை வங்கிகள் துன்புறுத்தக்கூடாது என்பதை தெளிவாக இந்த சுற்றறிக்கை விளக்குகிறது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக கடனை திரும்ப வசூல் செய்வதற்காக அடியாட்களை நியமிப்பதற்கு எந்த வங்கிக்கும் அதிகாரம் இல்லை.
எனினும் போலீஸ் மூலம் ஆவணங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்தபின் கடன் வசூல் ஏஜெண்டுகளை வங்கிகள் நியமித்துக்கொள்ளலாம். இது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல்களை வங்கிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இது தொடர்பாக புகார்கள் வந்தால், கடன் வசூல் ஏஜெண்டுகளை நியமித்துக்கொள்வதற்கு மேற்படி வங்கிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி பரிசீலிக்க முடியும். இவ்வாறு அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story