ஆளில்லா குட்டி விமானங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்
ஆளில்லா குட்டி விமானங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க விடுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:-
ஆளில்லா குட்டி விமானங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இந்த விமானங்கள், 250 கிராமில் இருந்து 250 கிலோ எடைவரை பல வடிவங்களில் இருக்கின்றன. இவற்றை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுக்கும். சூழல் மண்டலம் ஒன்று உருவாக்கப்படும். குட்டி விமானங்கள் பறக்க விட அனுமதி இல்லாத பகுதிகள் வரையறுக்கப்படும். இந்த விமானங்கள், இந்திய தொழில்நுட்பத்துடன் இங்கேயே தயாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், பறக்க தடை விதிக்கப்பட்டால், அவை பறக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். பல் மருத்துவ தொழிலை ஒழுங்குபடுத்தவும், பல் மருத்துவ கவுன்சில் அமைக்கவும் பல் மருத்துவர்கள் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அம்மசோதா, நேற்று நிறைவேற்றப்பட்டது.

Related Tags :
Next Story